சிறிலங்கா மீது இலத்திரனியல் போரைத் தொடுக்கிறது அமெரிக்கா ^சிறிலங்காவில் கடந்த ஆண்டில் 20 பேர் காணாமற்போயுள்ளனர் – அனைத்துலக மன்னிப்புச்சபை ^தடைகளை மீறுகிறது சிறிலங்கா – அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல் ^தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று சிறிலங்கா அமைச்சர்கள் ஆதரவு ^ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02 ^யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும் ^இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது ^சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா ^அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம் ^இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா? ^
இன்றைய செய்திகள்
சனி, 25-05-2013
வெள்ளி, 24-05-2013
வியாழன், 23-05-2013
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்கா அரசுக்கு கோத்தா எச்சரிக்கை
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. [விரிவு]
பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது
சிறிலங்காவைச் சேர்ந்த சட்டவிரோத குடிவரவாளர்கள் பிரித்தானியாவுக்குள் உள்நுழைவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 18 பேர் பிரித்தானியா மற்றும் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலகம் தெரிவித்துள்ளது [விரிவு]
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புழுதி படிந்த இராணுவ சோதனை முகாமானது, 'வேறொரு' சிறிலங்காவுக்குள் நுழைந்து விட்டதொரு உணர்வை முதன் முதலாக எனக்கு ஏற்படுத்தியது.  இவ்வாறு 'IBTimes' ஊடகத்தில் Mark Johanson எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். [விரிவு]
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத் திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [விரிவு]
'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு]
கொமன்வெல்த் கூட்டத்தில் மனிதஉரிமை ஆணையாளர் பதவியை உருவாக்க சுமந்திரன் ஆதரவு - சிறிலங்கா எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2012, 00:59 GMT ] [ கார்வண்ணன் ]
கொமன்வெல்த் அமைப்பின் சார்பில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனிதஉரிமைகளுக்கான ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் முயற்சியை கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவின் ஒரு பிரதிநிதியாக தாம் கொமன்வெல்த்தின் இந்த முயற்சியை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் பி அறையில் நடந்த குழுநிலைக் கலந்துரையாடலில் பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூ பேர்லியை அடுத்து பேசிய சுமந்திரன், இந்த நியமனம் அவசியமான தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பின் நடைபெற்று வரும் 58வது கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் நான்கு கட்டங்களாக நடைபெற்றும் கலந்துரையாடலின் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.

சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மை சமூகத்தின் தயவில் வாழவேண்டிய நிலையில் பிரித்தானியா விட்டுச் சென்றதாகவும் சுமந்திரன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரின் போது, மனிதஉரிமை பணியாளர்கள் அச்சுறுதல்களை எதிர்கொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குச் சென்றவர்கள் நாடு திரும்பும்போது அவர்களின் காலை முறிப்பேன் என்று சிறிலங்காவின் அமைச்சர் ஒருவரே பகிரங்கமாக எச்சரித்திருந்தார்” என்றும் சுமந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே கொமன்வெல்த் மனிதஉரிமை ஆணையாளர் பதவியை உருவாக்குவதற்கு சிறிலங்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் பதவியை உருவாக்க இந்தியாவும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா மீது இலத்திரனியல் போரைத் தொடுக்கிறது அமெரிக்கா
சிறிலங்காவில் கடந்த ஆண்டில் 20 பேர் காணாமற்போயுள்ளனர் – அனைத்துலக மன்னிப்புச்சபை
தடைகளை மீறுகிறது சிறிலங்கா – அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று சிறிலங்கா அமைச்சர்கள் ஆதரவு
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02
யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும்
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது
சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா
அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்
இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா?