|
|
| இந்தியாவுக்குப் பதிலாக சீனாவிடம் இருந்து பேருந்துகள் இறக்குமதி - சிறிலங்கா திட்டம் |
| [ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 02:15 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] |
இந்தியாவிடம் இருந்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்போவதாக சிறிலங்கா போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தாம் சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குத் தேவையான பேருந்துகளை இந்தியாவின் அசோக் லேலன்ட் நிறுவனமே வழங்கி வருகிறது.
இந்த நிறுவனமே சிறிலங்கா பேருந்துச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில், முதல்முறையாக சீனப் பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் குமார வெல்கம கூறியுள்ளார்.
“சீனாவின் மோட்டார் வாகன தொழில்நுட்பத்துறை வேகமாக வளரச்சியடைந்துள்ளது.
இந்தியாவின் அசோக் லேலன்ட் நிறுவனம் பேருந்துகளை கடனுக்கு வழங்குவதில்லை. சீன நிறுவனம் கடனுக்கு பேருந்துகளை வழங்கத் தயாராக உள்ளது.
நாம் ஒரே பேருந்து நிறுவனத்தில் தங்கியிருக்க வேண்டியதில்லை.
விரைவில் கொழும்பில் இரண்டு இரட்டைத்தட்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது வெற்றி பெற்றால், மேலும் பல பேருந்துகள் இறக்குமதி செய்ளப்படும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
|
|