சிறிலங்கா: போரும் பெய்த்துப்போகும் நல்லிணக்க முயற்சிகளும் ^அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல்? ^முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்ப்பு அடுத்தவாரம் ^சிறிலங்காவுக்கு விளையாட்டுத் தூதுவர்களை அனுப்புகிறது அமெரிக்கா ^இந்தியாவுக்கான தூதுவராக பேராசிரியர் சுதர்சன் செனிவிரத்ன – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு ^வடக்கு, கிழக்கிற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு 28 ஆகியது – வன்னிக்கு ஒரு மேலதிக ஆசனம் ^அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க சிறிலங்கா நடவடிக்கை ^சிறிலங்காவுக்கான இந்தியாவின் புதிய துணைத்தூதர் அரிந்தம் பக்சி – பிரதமர் பணியக பணிப்பாளராக இருந்தவர் ^ஐதேக வினரைத் துப்பாக்கியுடன் துரத்தினார் அம்பாந்தோட்டை நகரமுதல்வர் – முட்டைகளால் தாக்கி விரட்டினர் ^சிறிலங்கா போரில் இந்தியப் படைகள் - மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் இராணுவப் பேச்சாளர் ^
இன்றைய செய்திகள்
வெள்ளி, 18-04-2014
வியாழன், 17-04-2014
புதன், 16-04-2014
செவ்வாய், 15-04-2014
திங்கள், 14-04-2014
ஞாயிறு, 13-04-2014
சனி, 12-04-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது - கேணல் ஹரிகரன்
பயிற்சி, ஆயுத உதவிகள் தவிர்ந்த, இந்தியப் படைகள் அங்கு நேரடியாகப் போரில் பங்கேற்றதாக நான் அறியவில்லை.  ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, நிலைமையைப் பொறுத்து  படைகளை அனுப்பும் அதிகாரம் இந்தியப் பிரதமருக்கு உள்ளது. [விரிவு]
சிறிலங்கா இறுதிப்போரில் இந்தியப்படைகள் பங்கேற்பு – விசாரணை நடத்தக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மனு
இந்திய நாடாளுமன்றத்தினதோ, குடியரசுத் தலைவரினதோ ஒப்புதலின்றி இந்தியப் படையினர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து சிறப்பு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. [விரிவு]
சிறிலங்காவிற்கு எதிராக பொதுநலவாய அமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா?
இந்நிலையில் தற்போது சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க மாட்டேன் எனக் கூறுவதற்கு எதிராக பொதுநலவாய அமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? உண்மையில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. [விரிவு]
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறிலங்கா பயணம் நிறுத்தம் - நடந்தது என்ன?
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கான தமது பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டமையானது பிரித்தானியாவின் அரசியற் கட்சிகளுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. [விரிவு]
பான் கீ மூனுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா மதிக்க வேண்டும் - என்கிறது ஐ.நா
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009ம் ஆண்டு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐ.நா பெண் பேச்சாளர் எரி கனேகோ தெரிவித்துள்ளார். [விரிவு]
இந்திய சிறிலங்கா உடன்பாடு - 25 ஆண்டுகளின் பின்னர்: முன்னாள் இந்திய இராணுவத் தளபதி மதிப்பீடு
[ செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, 07:06 GMT ] [ நித்தியபாரதி ]
இவ்வாறான பாதகமான நிலைப்பாடுகள் காணப்பட்ட போதிலும், ஈழம் உருவாவதையும், சிறிலங்கா பிளவுபடுவதையும் தடுப்பதில் இந்திய அமைதி காக்கும் படைகள் செயலாற்றியிருந்தன. இதன் மூலம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்றவற்றை இந்தியாவால் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.

இவ்வாறு இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இருந்த அசோக் மேத்தா* இந்தியாவின் தேசிய ஊடகங்களில் ஒன்றான 'ரைம்ஸ் ஒப் இந்தியா' வில் நேற்று முன்தினம் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை  ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘.

25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாளில் (1987 ஜுலை 29) , அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் சிறிலங்கா அதிபர் யூனியஸ் ஜெயவர்த்தனவும் இணைந்து சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை அமைதி வழியில் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்தோ - சிறிலங்கா உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர். இவ் உடன்பாடு கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கி, சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவதற்காக இந்திய அமைதி காக்கும் படைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதுடன் உத்தரவாதத்தையும் வழங்கிக் கொண்டது.

சிறிலங்கா அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவில் இந்தோ- சிறிலங்கா உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கான கருவியாக பயன்படுத்தப்பட்டனர். இவ் உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னர், இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1200 வீரர்கள் தமது உயிர்களை இழந்தது, 2500 பேர் வரை காயமடைந்த நிலையில், சிறிலங்காவை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர்.

அப்போது தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவி வகித்த மு.கருணாநிதி 'இந்திய அமைதி காக்கும் படை' என்ற பெயரை 'தமிழரை கொன்ற இந்தியப்படை' (Indian Tamil Killing Force) என மாற்றி அழைத்தார். இது இந்தியாவின் இராணுவத் தலையீடு மற்றும் இராஜதந்திரம் தொடர்பான மதிப்பை கீழிறக்கியது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் ஆதரவுடன், சிறிலங்கா அரசாங்கமானது புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து, நீண்டகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை. "உங்களால் தொடங்கப்பட்ட வேலை எங்களால் முடிக்கப்பட்டுள்ளது" என யுத்த வெற்றிக்கு பின்னர் சிறிலங்கா இராணுவத் தளபதி ஒருவர் இக்கட்டுரையாளருக்கு இவ்வாறு எழுதியிருந்தார்.

இந்திய அமைதி காக்கும் படை, சிறிலங்காவில் பணியாற்றிய போது சிறிலங்கா ஆட்லறிப் படைக்கு பொறுப்பாக இருந்த லெப்ரினன்ட் ஜெனரல் ஹமில்ரன் வணசிங்க யுத்த வெற்றிக்கு முன்னர் எழுதியிருந்த கடிதமொன்றில், "இந்தியா எம்மைத் தனிமையில் விட்டிருந்தால், புலிகள் தொடர்பான பிரச்சினையை  சிறிலங்காவே முடிவுக்கு கொண்டு வந்திருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா மீதான வெளிநாட்டு இராணுவப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புக்களின் பிரசன்னம் இந்தியாவுக்கு தடையாக காணப்படுகின்றது. அத்துடன் தந்திரோபாய ரீதியாக இந்தியாவானது சிறிலங்காவில் தலையீடு செய்வதில் தமிழ்நாட்டு அரசியல் தடையாக உள்ளது.

சிறிலங்கா இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகள் தென்னிந்தியாவின் உள்ளக பாதுகாப்பினை கேள்விக்குறியாகியுள்ளது. சிறிலங்கா மீதான இந்தியாவின் இராஜதந்திர நகர்வு தோல்வியுற்றமைக்கு இந்திய அமைதி காக்கும் படை பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது மட்டுமல்ல, இத்தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஜெயவர்த்தன மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகிய இருவரையும் ஏமாற்றுகின்ற ஒரு தந்திரோபாயமாகவே இந்தோ - சிறிலங்கா உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. இவ் உடன்பாட்டில் கைச்சாத்திடுகின்ற ஒரு நாடாக மட்டுமல்ல, இந்தியாவின் பொறுப்பாளி என்கின்ற நிலையையும் கருத்திற் கொண்டே சிறிலங்காவானது இந்தியாவுடன் இவ் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.

ஜெயவர்த்தனா, இந்திய அமைதி காக்கும் படையின் 'சிங்' இனத்து வீரர்களை முகாமைத்துவப் பொறுப்புக்களுக்கு நியமித்தார். ஆனால் இவர்களது திட்டமிடல்கள் மற்றும் புலனாய்வு போன்றன குறைவாகவே காணப்பட்டன. புலிகள் சரணடைந்தால் அவர்களது ஆயுதங்கள் பறிக்கப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டன. எதிர்காலம் தொடர்பான தவறான திட்டமிடல், தெளிவான விளக்கவுரை இன்மை, சரியான ஒருங்கிணைந்த திட்டமின்மை, கட்டளைச் சங்கிலி மற்றும் கோட்பாடு என்பன அமைதி காக்கும் படையின் தோல்விக்கு காரணமாகின.

அரசியல் எவ்வாறு திடீரென மாற்றமடையும் என்பது தொடர்பில் இந்தியா கருத்திற் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் 1989ல் மேற்கொள்ளப்பட்ட தேர்தல்களில் இரு நாட்டு அரசாங்கங்களில் மாற்றம் ஏற்பட்டது. சிறிலங்காவில் ஆட்சிக்கு வந்த அதிபர் ரணசிங்க பிறேமதாச, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்திய அமைதி காக்கும் படையை நாட்டை விட்டுத் துரத்துவதற்கான திட்டத்தை தீட்டினார்.

இவ்வாறான பாதகமான நிலைப்பாடுகள் காணப்பட்ட போதிலும், ஈழம் உருவாவதையும், சிறிலங்கா பிளவுபடுவதையும் தடுப்பதில் இந்திய அமைதி காக்கும் படைகள் செயலாற்றியிருந்தன. இதன் மூலம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்றவற்றை இந்தியாவால் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பிளவுபடுவதற்கும் அமைதி காக்கும் படை காரணமாக உள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இந்திய அமைதி காக்கும் படையினர் புலிகள் அமைப்பை பலமிழக்கச் செய்தனர். இதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது மக்கள் விடுதலை முன்னணியால் சிறிலங்காவின் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

மரபுசார் ரீதியில் ஒரு மாதம் நீடித்த யாழ்ப்பாணச் சமரும்,  20 மாதங்கள் நீடித்த குறுகிய கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கையும் இந்திய இராணுவத்திற்கு பல தந்திரோபாயப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவியது.  குறிப்பாக, விடுதலைப் புலிகளால் மிகத்திறமையாகப் பயன்படுத்தப்பட்ட கண்ணிவெடிகள் குறித்து பாடங் கற்க முடிந்தது. இவற்றினாலேயே இந்தியப்படைகளுக்கு 70 வீத இழப்புகள் ஏற்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் தவறான அரசியற் கணிப்பீடு மற்றும் புலிகளின் மரபுசார் யுத்தத்தை முறியடிப்பதற்கு தேவைப்பட்ட வளங்கள் என்பன இந்தியாவை தோற்கடிக்கச் செய்தது.

1989ல் பிரபாகரனுடன் மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டை எதிர்த்து கொழும்பிலிருந்த இந்திய உயர் ஆணையகத்தின் முன்னர் பௌத்த பிக்குகள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 'இந்திய படையே உன்நாட்டுக்கு திரும்பு' என முழக்கமிடப்பட்டது. ஆனால் 2000ல் சிறிலங்காப் படையினர், ஆனையிறவு நடவடிக்கையில் புலிகளிடம் தோல்வியடைந்ததன் பின்னர், மீண்டும் 'இந்திய அமைதி காக்கும் படை' சிறிலங்காவுக்கு திரும்ப வேண்டுமென கோரப்பட்டது.

இதன் பின்னர் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளில் இந்தியப் படையினர் பங்குபற்றினர். கொழும்பின் மையப்பகுதியில், சிறிலங்காப் போரில் தமது உயிர்களை இழந்த இந்தியப் படையினரை நினைவு கூர்ந்து நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவானது தான் விட்ட தவறை மீண்டும் செய்தமையானது இந்திய அமைதி காக்கும் படைக்கு இழிவை ஏற்படுத்தும் செயலாகவே நோக்கப்படுகிறது.

*The author is a retired major general of the Indian Army, a former GOC IPKF South and founder member of Defence Planning Staff.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா: போரும் பெய்த்துப்போகும் நல்லிணக்க முயற்சிகளும்
அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல்?
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்ப்பு அடுத்தவாரம்
சிறிலங்காவுக்கு விளையாட்டுத் தூதுவர்களை அனுப்புகிறது அமெரிக்கா
இந்தியாவுக்கான தூதுவராக பேராசிரியர் சுதர்சன் செனிவிரத்ன – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு
வடக்கு, கிழக்கிற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு 28 ஆகியது – வன்னிக்கு ஒரு மேலதிக ஆசனம்
அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க சிறிலங்கா நடவடிக்கை
சிறிலங்காவுக்கான இந்தியாவின் புதிய துணைத்தூதர் அரிந்தம் பக்சி – பிரதமர் பணியக பணிப்பாளராக இருந்தவர்
ஐதேக வினரைத் துப்பாக்கியுடன் துரத்தினார் அம்பாந்தோட்டை நகரமுதல்வர் – முட்டைகளால் தாக்கி விரட்டினர்
சிறிலங்கா போரில் இந்தியப் படைகள் - மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் இராணுவப் பேச்சாளர்