தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்? ^சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி ^கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா ^யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள் ^ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி ^சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு ^சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள் ^ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01 ^தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம் ^யாழ்.குடாநாட்டு படைமுகாம்கள் அனைத்தும் பலாலிக்கு மாற்றப்படுமாம் ^
இன்றைய செய்திகள்
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
வெள்ளி, 17-05-2013
வியாழன், 16-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். [விரிவு]
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. [விரிவு]
சிறிலங்காவின் 'தென்னாசியாவின் சிங்கப்பூர்' கனவு... நெருக்கடியில்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்  போரில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவானது தென்னாசியாவின் வலுமிக்க பொருளாதார நாடாக வளரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிலங்காவின் பொருளாதாரமானது நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. [விரிவு]
மன்னார் தீவில் மீள்குடியேறிய தமிழ்மக்கள் சிறிலங்கா இராணுவத்தால் விரட்டியடிப்பு
[ புதன்கிழமை, 27 யூன் 2012, 07:03 GMT ] [ வவுனியா செய்தியாளர் ]
சிறிலங்காவின் வடக்கே மன்னார் தீவில் இரு வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேறிய 45 கத்தோலிக்க, தமிழர்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேறுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையெனவும் இராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

2008ல் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவால் இந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தமக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக, கிராமத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"நள்ளிரவுக்கு முன்னர் எம்மை எமது சொந்த வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவத்தினர் கட்டளையிட்டனர். இதனால் நாங்கள் எமது பிள்ளைகளுடன் ஐந்து கிலோமீற்றர் தூரம் வரை நடந்து இத்தேவாலயத்தை வந்தடைந்தோம்" என பியஸ் ஆனந்தகுமார் அசுந்தா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடரப்பட்;ட உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் 448,000 வரையான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும், இவர்களில் 6000 பேர் வரை தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐ.நா அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"நாங்கள் எமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக கத்தோலிக்க மதகுருமார்கள் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். யூன் 27ம் நாளுக்கிடையில் வீடுகளை மீளக் கையளிப்பதாக உறுதிவழங்கப்பட்டுள்ளது" என சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள பேசாலை தேவாலய கத்தோலிக்க மதகுருவான அவிதாப்பர் விக்ரன் சவிரி அடிகளார் தெரிவித்துள்ளார்.

தமது பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்களது இடங்களில் மீள்குடியேற்றப்படுவதற்கு முன்னர், அக்குடும்பங்கள் தொடர்பான முழுவிபரங்களையும் தேவாலய நிர்வாகம் சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கும் எனவும் சவிரி அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தேவாலயத்துக்கு சொந்தமான நிலத்தில், வெற்றிமண் வீட்டுத் திட்டத்தின் கீழ் கத்தோலிக்க தொண்டர் அமைப்பான இயேசு அகதிகள் சேவை 50 வீடுகளை நிர்மாணித்திருந்தது. இவ்வீடுகள் 2006ல் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

நிலங்களின் உரிமையாண்மையை உறுதிப்படுத்தி அவற்றைப் பதிதல் என்பது சிறிலங்காவின் வடக்கில் ஒரு வெற்றிகரமான முதலீடு மற்றும் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தாம் தயாராக இருப்பதாகவும் சிறிலங்காத் தீவில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிப்பதாகவும், சிறிலங்காவுக்கான ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் டக்ளஸ் கே தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம் : ucanews.com reporter, Mannar
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்?
சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி
கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி
சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு
சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள்
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
யாழ்.குடாநாட்டு படைமுகாம்கள் அனைத்தும் பலாலிக்கு மாற்றப்படுமாம்