வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா ^கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு ^புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் ^13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய ^அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும் ^ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி ^மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
இலங்கை வரலாற்றின் துன்பியல் கதையைச் சொல்லும் செய்மதி ஒளிப்படங்கள்
"இவ்விரு செய்மதி ஒளிப்படங்களும் எனது நாட்டின் வரலாற்றுப் பதிவுக்கு ஆதாரமாக உள்ளன. இது மிகவும் வியத்தகு ஆவணமாக உள்ள போதிலும், எதிர்கால சந்ததியினர் இதனைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போய்விடுமோ என நான் அச்சம் கொள்கிறேன்" [விரிவு]
அனைத்துலக அழுத்தங்களுக்கு அடிபணிந்தது சிறிலங்கா - ஐ.நா குழுவை அனுமதிக்க இணக்கம்
[ வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 00:19 GMT ] [ கார்வண்ணன் ]
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையின் பணியகம் சிறிலங்காவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள அதிகாரிகள் குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

“ஐ.நா முகவர் அமைப்புகளுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் சிறிலங்கா, ஐ.நாவுடன் சுமுகமாகப் பணியாற்றி வருகிறது.

ஐ.நா மற்றும் ஐ.நா முகவர் அமைப்புகளுடனான இந்த நெருக்கமான உறவுகளின் அடிப்படையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அனுப்பத் திட்டமிட்டுள்ள குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காது.

அவர்களை சிறிலங்கா வரவேற்கும்.“ என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, நவிபிள்ளையை மட்டும் அனுமதிப்போம், வேறு எந்த அதிகாரிகள் குழுவையும் சிறிலங்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது.

மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது.

இதேவேளை, ஐ.நா குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சிங்கப் பேரினவாதக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்தநிலையில் ஐ.நா குழுவின் வருகை மீதான சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கிலேயே, சிறிலங்கா அரசாங்கம் மூன்று மாகாணசபைகளைக் கலைத்து தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா
கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்
ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி
மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம்